Monday 31 July 2017

பிரபலங்கள் வாழ்வில்


மூன்று ஆசைகள் 

மாவீரன் அலெக்ஸாண்டர் மரணத் தறுவாயில், தளபதிகளை அழைத்து தனது 3 இறுதி ஆசைகளைத் தெரிவித்தார்.
தமது சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள் சுமந்து செல்ல வேண்டும், இதுவரை தாம் சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவற்றை இறுதி ஊர்வலப் பாதையில் தூவிச் செல்ல வேண்டும், தமது கைகளை சவப்பெட்டியின் வெளியில் தொங்கிக்கொண்டு வரும்படி செய்ய வேண்டும் என்பவையே அந்த 3 இறுதி ஆசைகள்.
தளபதிகளில் ஒருவர் அலெக்ஸாண்டரின் அசாதாரண ஆசைகள் குறித்து அவரிடமே தைரியமாக கேள்வி எழுப்பினார்.
அதற்கு அலெக்ஸாண்டர், “ தலைசிறந்த மருத்துவர்களால்கூட என்னை நோயிலிருந்து காப்பாற்ற முடியாத்தால், இறப்பை யாராலும் தடுக்க முடியாது என்பது உலகம் தெரிந்துகொள்ள வேண்டும்.  நான் இந்த பூமியில் சேகரித்த, கைப்பற்றிய பொருட்கள் பூமிக்கே சொந்தமானது மக்கள் அ றிந்து கொள்ள வேண்டும். சவப்பெட்டிக்கு வெளியே தொங்கும் எனது கைகள், காற்றில் அசையும் போது, வெறும் கையுடன் வந்த நான் வெறும் கையுடன் தான் செல்கிறேன் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். என்பதை இந்த உலகத்திற்கு தெரிவிக்க இந்த மூன் ஆசைகள் ” என்றார்.

அறிவாளியை சந்திக்கவில்லை

கவிஞர் வாலியை சந்தித்த நண்பர் ஒருவர், “ வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?” என்று கேட்டார்.
அதற்கு வாலி, “ ராமாயணத்திலே, வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி,அவனுக்கு வந்து விடுமாம்.அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்.என்றார்.
உடனே நண்பர் கிண்டலாக, “ அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?”
வாலி சிரித்துக் கொண்டே, “ நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே! என்றார்.
சமரசம் 

அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஆப்ரகாம் லிங்கன் வழக்கறிஞராக பணியாற்றியபோது, பணக்காரர் ஒருவர் அவரிடம் வந்தார். அவருக்கு ஏழை ஒருவர் ஐந்து டாலர் கடன் கொடுக்க வேண்டியிருந்தது.
பணக்காரர் விவரத்தைச் சொல்லி, அவர் மீது வழக்குப் போட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
வெறும் ஐந்து டாலர்களுக்காகவா வழக்கு போடப் போகிறீர்கள்?” என்று லிங்கன் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தும் அந்தப் பணக்காரர் கேட்பதாக இல்லை.
சரி, எனக்கு வழக்காடுவதற்காக 10 டாலர் கட்டணமாக நீங்கள் தர வேண்டும்என்று லிங்கன் கேட்டார்.
பணக்காரரும் 10 டாலர்களை உடனே லிங்கனிடம் கொடுத்தார். அதைப் பெற்றுக் கொண்ட லிங்கன் அந்த ஏழையை அழைத்து அவரிடம் 5 டாலர்களைக் கொடுத்துக் கடனை அடைக்கச் சொன்னார்.
பணக்காரரும் கடன் கிடைத்த மகிழ்ச்சியில் தமது இல்லம் திரும்பினார்.

நான்எ ங்கே போவது?

 எம்.ஜி.ஆருக்கு ஒரு தீராத ஏக்கம் இருந்தது. தனது  இல்லத்திற்கு எத்தனையோ தலைவர்களை அழைத்து விருந்து கொடுத்து மகிழ்ந்த அவருக்கு, ஒரே ஒரு முறை காமராஜரை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்த விருப்பம்.  ஆனால் எப்போது அழைத்தாலும் காமராஜர் சிரித்தபடி சொல்றேன்என்கிற ஒற்றை வார்த்தையால் தவிர்த்து விடுவார்.
ஒரு முறை சிவாஜி, எம்ஜிஆர் பங்கு பெற்ற ஒரு விழாவிற்கு முதல்வர் காமராஜர் வந்திருந்தார்.
காமராஜரை வழியனுப்பும் போது மீண்டும் அழைப்பு விடுத்தார் எம்ஜிஆர். அப்போதும் அதே புன்னகை மாறாமல் ராமச்சந்திரா நான் உன் இல்லம் வரக் கூடாது என்றில்லை. உன் வீட்டு விருந்து பற்றி நிறைய கேள்விப் பட்டுள்ளேன். அறுசுவை உணவும் மீன் இறைச்சியும் அசைவ உணவுகளும் நிறைந்திருக்கும் என்று கூறுவார்கள். நான் மக்கள் ஊழியக்காரன் ரெண்டு இட்லி, தயிர் சோறு தான் எனக்கு சரிப்படும் உன் வீட்டில் அறுசுவை உணவு சாப்பிட்டு விட்டால் திரும்பவும் அந்த ருசியை நாக்கு தேடும்..அதுக்கு நான் எங்கே போறதுஎன்று கூற ஆடிப்போனார் எம்ஜிஆர்.
தன்னையும் அறியாமல் காமராஜரை கைகூப்பி வணங்கினாரார் எம்.ஜி.ஆர்.


3 comments:

  1. முதலாவது படித்திருக்கிறேன். மற்ற இரண்டும் புதியவை எனக்கு. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    தொடரட்டும் பதிவுகள்.....

    ReplyDelete
  2. காமராஜர், எம்.ஜி.ஆர் தகவல் புதுசு

    ReplyDelete
  3. நல்ல பகிர்வு நன்றி

    ReplyDelete