Monday 2 October 2017

அப்பா

அம்மாவைப் பற்றி எழுதுபவர்கள் அதிகம். அப்பா கண்டுகொள்ளப்படுவது அபூர்வம். அன்னையர் தினத்திற்கு உள்ள பிரபலம், தந்தையர் தினத்திற்கு கிடையாது என்பது நாம் அறியாதது ஒன்றும் இல்லை. என்றாலும், அப்பாவை குறித்து ஃபீல் செய்பவர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்?

அப்பா

அம்மாவின் கஷ்டம் நமக்குப் புரியும்
ஆனால்,
அப்பா படும் கஷ்டம் யாராவது
சொன்னால்தான் தெரியும்

அப்பா நமக்காக வாங்கி வரும்
ஒவ்வொரு பொருளும்
அவர் காலத்தில்
அவருக்கு கிடைக்கப் பெறாதவையாக
இருக்கக்கூடும்.

சாப்பிட்டியாப்பா?’ என்பது
அம்மாவின் பாசம் என்றால்,
சாப்பிட்டானான்னு கேளுஎன்பது
அப்பாவின் பாசம்.

மகனையோ
மகளையோ அடித்துவிட்டால்,
அவர்கள் தூங்கியபின்
அவர்கள் அருகில் அமர்ந்து அழும்போது
தந்தையிடம் காணலாம்
ஆயிரம் தாயின் பாசத்தை.

ஒரு சொல் கவிதை என்றால்
அம்மா.
ஒரு சொல் சரித்திரம் என்றால்
தந்தை.

கடவுள் பூமிக்கு வருவதில்லை
அதனால் தாயை பூமிக்கு அனுப்பி வைத்தான்.
ஏன் வரக்கூடாது என்று
வந்தேவிட்டான்
தந்தையாக.

வலிக்காமல் அடித்து
தூங்க வைப்பது அம்மா.
வலிக்கும்படி அடித்துவிட்டு
தூங்காமல் தவிப்பது
அப்பா

மழுங்கிப் போன
அப்பாவின் கண்ணாடியை அணிந்தபோது,
பூதாகரமாகத் தெரிந்த்து
எங்களுக்காக அவர் தொலைத்த வாழ்க்கை.


படிப்பை முடித்து
நடுரோட்டில் அலையும்போது
தகப்பனின் வியர்வையை உணர்கிறான்
ஆண்.

ஐந்து வயதில் ஹீரோவாகி
இருபது வயதில் வில்லனாகி,
ஐம்பது வயதில் தெய்வமாகிறார்
அப்பா



3 comments:

  1. உண்மை ... /ஏன் வரக்கூடாது என்று வந்தேவிட்டான்தந்தையாக./ சூப்பர்

    ReplyDelete
  2. அருமை.

    எமது "அப்பாவின் காலணிகள்" படித்து கருத்துரைக்கவும்.

    கோ

    ReplyDelete