Saturday, 7 October 2017

சிரிச்சடுங்க பிளீஸ்..


😀

பஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.
ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....
நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....

😀

மாணவன் : பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதி தான் சார் காரணம்!
ஆசிரியர் : இப்பவாவது உணர்ந்தியே!
மாணவன் : கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!

😀

தொண்டன் 1: எதுக்குய்யா தலைவர் நெஞ்சுல அடிக்கடி தண்ணீர் தெளிக்கிறாரு?
தொண்டன் 2: எதிர்க்கட்சிகாரங்க தலைவருக்கு நெஞ்சுல ஈரமே இல்லைனு சொல்றாங்களாம்.

😀

மருத்துவர் : ஸாரிமா... குழந்தை ஆணா, பெண்ணான்னு ஸ்கேன்ல பார்த்து சொல்றது சட்டப்படி தப்பு..
பெண் : போனாப் போகுது... குழந்தை என் ஜாடைல இருக்கா, இல்லே அவர் ஜாடைல இருக்கான்னாவது சொல்லுங்க.
😀
டாக்டர்: நீங்க பிழைக்கிறது கஷ்டம்...
நோயாளி: ஏன் டாக்டர்?
டாக்டர்: ஸ்டெதஸ்கோப்புல சங்கு சத்தம் கேட்குதே..

😀

நோயாளி: டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
டாக்டர் : இந்த டானிக்கை சாப்பிடுங்க.
நோயாளி: சாப்பிட்டா இருமல் சரியாப் போயிடுமா ?
டாக்டர்: no no...நல்லா இருமலாம்...

😀

டாக்டர் : தற்கொலைக்கு முயற்சி செஞ்சீங்களாமே?
நோயாளி: ஆமா டாக்டர் வயித்துவலி பொறுக்க முடியல....
டாக்டர்: நான் தான் நாளைக்கு ஆப்பரேஷன் பண்றேன்னு சொல்லிருக்கேன்ல.... அதுக்குள்ள என்ன அவசரம்?

😀

ஒருவர்: எனக்கு தூக்கத்தில் உளர்ற வியாதி இருக்குன்னு சர்ட்டிபிகேட் தர முடியுமா டாக்டர்?
டாக்டர்: ஏன்?
ஒருவர்: என் மனைவியை திட்ட வேற வழி தெரியலை டாக்டர்...

😀

நடிகை: டாக்டர்! எனக்கு பல்லு கூச்சமா இருக்கு !
டாக்டர்: பரவாயில்லை... விடுங்க! கூச்சம் அங்கேயாவது இருந்துட்டுப் போகட்டும்!

😀

டாக்டர்: தினமும் வெறும் வயிற்றில் காலையில் வெந்நீர் குடிக்கணும்
ஒருவர்: இப்பவும் வெந்நீர்தான் டாக்டர் குடிக்கிறேன். என்ன... என் மனைவிதான் அதை காபினு சொல்றா..

😀

என்ன டாக்டர் இது... பிரிஸ்கிரிப்ஷன்ல 'ஐ லவ் யூ...'ன்னு எழுதியிருக்கீங்க..?'
''சாரி! இது நர்சுக்கு கொடுக்கவேண்டிய சீட்டு... இடம் மாறிடுச்சு!''

😀

''கையைத் தூக்கவே முடியலை டாக்டர்.''
''டோண்ட் வொர்ரி. உங்க சட்டை பாக்கெட்டுல இருந்து நானே பீஸை எடுத்துக்றேன்....'''

😀

‘‘ஆபரேஷன் பண்ணி எப்படியாவது எங்க அப்பாவைக் காப்பாத்திடுவீங்கன்னு நினைச்சேன்...ஸ்ரீ ஏமாத்திட்டீங்களே டாக்டர்...’’
‘‘நல்ல கதையா இருக்கே... நீங்களே வீணா ஏதேதோ கற்பனை பண்ணிக்கிட்டா, அதுக்கு நானா பொறுப்பு?’’

😀

ராமு :எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் டைனோஸரஸையெல்லாம் சுட்டிருக்காரு தெரியுமா.?
சோமு : இப்பத்தான் டைனோஸரஸே கிடையாதே.!
ராமு :எப்படி இருக்கும் நான்தான் சொன்னேனே.அவர் டைனோஸரஸையெல்லாம் சுட்டுட்டாருன்னு!

😀

சார்மீனுக்கு புழு வாங்கணும், அங்கே பக்கத்துல ஏதாவது கடை இருக்கா..?
பக்கத்துல ரேஷன் கடை இருக்கு பாருங்க…!!

😀

மனைவி : ஏங்க!.. புண்ணியம் செய்தவர்களை இங்கிலீஷ்'ல எப்படி சொல்லுவாங்க?
கணவன் : Unmarried - னு சொல்லுவாங்க"

😀

பிளீஸ் சிரிச்சிடுங்க...

கண்டக்டர்: விசில் அடிச்சிக்கிட்டே இருக்கேன், நீ பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கே?

டிரைவர்: இங்கே மட்டும் என்னவாம்...? பிரேக் அடிச்சிக்கிட்டே இருக்கேன். வண்டி பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்குதே!

😀

"மேலே இருந்து கீழே வந்தால் அது அருவி..."
"அப்ப... கீழே இருந்து மேலே போனால்..?"
"அது.... குருவி!"

😀

பிச்சைக்காரர்: அம்மா தாயே... பிச்சை போடுங்க, நான் வாய் பேச முடியாத ஊமை.
வீட்டுக்காரம்மா: பக்கத்து வீட்டுல போய் கேளுப்பா...எனக்கு காது கேட்காது.

😀

ஏய் என்னோட காதலிக்கு எதாவது பரிசு தரணும். என்ன தரட்டும்?”
ஒரு தங்க மோதிரம் வாங்கிக்கொடு.
வேற எதாவது பெரிசா சொல்லு.
ஒரு MRF டயர் வாங்கிக்கொடு.


😀

4 comments: